தன்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜோன் மெகபுலி இன் இறுதி சடங்கில் கலந்துகொண்ட பொதுமக்கள் சுமார் 45 பேர் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தன்சானியா நாட்டு அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. தன்சானியா நாட்டின் பெரிய நகரமான தாருஸ்ஸலாம் இல் மறைந்த ஜனாதிபதி ஜோன் மெகபுலி இன் இறுதி அஞ்சலி நிகழ்விலேயே மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவிட் தொற்றால் மார்ச் மாதம் 21ம் திகதி காலஞ்சென்ற இவர் இறக்கும்போது இவருக்கு வயது 61.
இவரின் மறைவுக்குப் பின்னர் ஜோன் மெகபுலி அரசாங்கத்தில் அந்நாட்டின் உப ஜனாதிபதியாக இருந்த 61 வயதாகும் சாமியா சலாகு ஹாசன் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியும் மேற்கு ஆப்பிரிக்காவில் முதல் உயர் பதவிக்கு வரும் பெண்மணியான இவர் கிறிஸ்தவ பெரும்பான்மையை கொண்ட தன்சானியா நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் ஆகும்.
1994 இல் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப் படிப்பை நிறைவுசெய்த பட்டதாரியான இவர்.
2000 – 2005 ஆம் ஆண்டு வரை Zanzibar இல்லத்தில் உறுப்பினர் ஆகிய இவர் அதே ஆண்டு தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இவர் அப்போதைய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒரே ஒரு மந்திரிசபை (கேபினட்) உறுப்பினர் ஆவார்.
2005 முதல் 2010 வரை திரும்பவும் Zanzibar இல்லத்தில் உறுப்பினராகி சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் Makundichi தொகுதியில் போட்டியிட்டு சுமார் 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.