அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யவில்லையா? சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் தற்பொழுது பல பாகங்களிலும் இருந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதனால் அதிகமாக தொற்றாளர்கள் காணப்படும் கிராம சேவகர் பிரிவு அல்லது பொலிஸ் பிரிவு மாத்திரம் தனிமைப்படுத்தப்படுவதாகவும் கடந்த வருடம் பொதுமக்களை சிரமத்திற்குட்படுத்தாமல் முன்னறிவித்தல் செய்யப்பட்டு பின்னர்அப்பகுதி தனிமைப் படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது நாட்டில் பரவி வரும் இந்த புதிய கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகம் என்பதனால் தற்பொழுது எந்த முன்னறிவிப்புமின்றி தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் திடீர் என்று தொற்றாளர்கள் அதிகமாக காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதனால் அப்பகுதி மக்கள் தயார் நிலையில் இல்லையாயின் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

எனவும் எனவே நாட்டை தற்போதைக்கு முடக்கும் நோக்கம் இல்லை எனவும். நாடு முடக்கப்படும் என்று தெரிவித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள