முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அவர்கள் மேலும் 90 நாட்கள்!

கடந்த 24ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிப்பதற்காக கிடைக்கப்பெற்ற ஆணை இன்று(27) காலை நிறைவுக்கு வந்தது.

இதனால் இவர்கள் இருவரையும் மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை காவல்துறையால் பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று(26) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இன்று(27) அந்த விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இன்று(27) முதல் மேலும் 90 நாட்களுக்கு இருவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள