தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் எனவும் அவர்களை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் 10,000/= ரூபா தண்டப்பணம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
திருகோணமலை, குருநாகல, கம்பஹா, காலி, களுத்துறை, பொலன்நறுவை மற்றும் மாத்தறை ஆகிய 7 மாவட்டங்ககளிலும் சுமார் 109 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதில் 87 கிராமசேவகர் பிரிவுகள் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாகும்.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1466 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவே இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றாளர்கள் ஆகும். இதுவரை நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,04,953 ஆகும் அதேவேளை பதிவாகிய மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 661ஆகும்.