இந்த வாரம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை விடப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 3ஆம் திகதி திங்கள்கிழமை பாடசாலைகள் நடைபெற தேவையான சுகாதார நிலைமையை ஆராய்வதற்கு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரப் பிரிவு, கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கள்கிழமை விரிவுரைகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்த அவர் மேலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) முதல் 7 நாட்களுக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இது சம்பந்தமாக தாம் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.