கோவிட்-19 புதிய திரிபு ஆரம்பத்தில் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவசர சேவைப் பிரிவுக்கு நோயாளர்கள் செல்வதைத் தடுக்க முடியும். காய்ச்சல் அல்லது தடுமன் போன்ற எந்த அறிகுறிகளும் காண்பிக்காமல் நுரையீரலைத் தாக்கி நியூமோனியா நிலைமையை இந்த புதிய வைரஸ் உருவாக்கும்.
சாதாரணமாக இந்த தொற்றாள் பாதிக்கப்பட்ட ஒருவர் உட்கார்ந்து இருக்கும் போது அவரின் உடம்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்கும். ஆனால் அவர் எழுந்து நடக்கும் போது திடீரென உடம்பில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பிக்கும் இதுவும் இந்த நோயின் ஒரு அறிகுறி ஆகும்.
நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளலாம் நீங்கள் மாடிப்படி ஏறும் போது , நடக்கும்போது அல்லது பேசும்போது வழமைக்கு மாறாக மூச்சுத்திணறல் அல்லது மூச்சுவாங்கும் நிலை ஏற்படுமானால்..
அல்லது சாதாரணமாக நுரையீரல் வீக்கம் அடைந்திருந்தாள் நுரையீரலில் மூச்சை இழுத்து நிறுத்தும் காலம் குறையும். நீங்கள் மூச்சை இழுத்து நிறுத்தி 1 முதல் 40 வரை(இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்) மனதால் அல்லாமல் வாய்விட்டு எண்ணியதன் பின்னர் சுமார் 10 மீட்டர் நடந்து பாருங்கள் இது உங்களால் முடியாமல் மூச்சு வாங்கும் நிலை ஏற்படுமானால் இதுவும் ஒரு நோய் அறிகுறியாக இருக்கலாம் தாமதிக்காது அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லவும்.
உடம்பில் ஆக்சிஜன் அளவு குறைய ஆரம்பித்தவுடன் மூன்று மாத்திரைகள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் ரத்தம் உறைய ஆரம்பிக்கும் அதனால் ரத்தம் உறைவதை தடுக்க ஒரு மாத்திரையும்
- நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு (Dexamethasone) மாத்திரையும்
- இந்த வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்படும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த அதற்கு எதிராக செயல்படுவதற்குத் தேவையான மாத்திரை.
இந்த மூன்று மாத்திரையையும் ஆரம்ப கட்டத்தில் நோயாளிக்கு கொடுக்கப்படும் போது அந்த நோயாளி அவசர சேவைப் பிரிவுக்கு செல்வதை தடுத்துக்கொள்ள முடியும் இது விஞ்ஞானரீதியாக ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.
ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வைத்தியர் பிரசன்ன குணசென (Lanka Hospital) Consultant Neura Surgeon Dr Prasanna Gunasena (Lanka Hospital).
Thanks