இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது கட்டுக்கதை மற்றும் பொய்களால் ஆகும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது அதை தடுக்க வேண்டும் போன்ற கோஷங்களால் ஆகும் என்று இன்று நடைபெற்ற பிரஜைகள் சக்தி அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் சரத் விஜேசூரிய கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்குள் அரசாங்கத்திற்கு ஆதரித்தவர்கள் தான் செய்த தவறுக்கு வருந்தும் நிலையில் உள்ளனர். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை எப்படி என்றால் ஒரு வாகனத்தில் புத்தரின் போதனை பின்பற்றுவோம் என்று எழுதி அதே வாகனத்தில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை கொண்டு செல்வது போன்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மற்றும் கொடுத்த வாக்குறுதிக்கும் சட்டத்திற்கு எதிராக தான் இருக்கிறது.
நாட்டுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக எந்த வகையான சட்டத்தை நடைமுறை படுத்தப்பட உள்ளது என்பது ஒரு கேள்விக் குறியாகும். எந்த நடைமுறையின் பிரகாரம் தங்களது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து ஆணைக்குழுக்கள் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு சிறு பிள்ளை காடழிப்பை பற்றிப் பேசும்போது அந்தப் பிள்ளையை வீழ்த்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்னொரு பக்கத்தில் வாழ்க்கைச் செலவு! அவை வானளவு உயர்ந்து உள்ளது. நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் நோக்கம் கடுகதியில் உள்ளது. சட்டத்திற்கு முரணாக மஞ்சள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் நாட்டுக்குள் வருவிக்கப்பட்டது என தெரிவித்து அவை அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ஏன் அந்த விளையாட்டுப் பொருட்களை நம் நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி இருக்கலாம். இதில் யானைத் தந்தங்களும் அடங்கும்.
மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என உறுதி செய்யப்பட்டிருந்தது நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யை அளிக்காமல் இருப்பதற்கான காரணம் தான் என்ன? தமது நண்பர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலா? மக்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன் குறைந்தபட்சம் பொதுமக்களாகிய நீங்கள் நடப்பதைக் கண்டு பொய் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்தின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்களின் இயலாமையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும்போது ஆட்சியாளர்களுக்கு செய்வதற்குரிய ஒரே செயல் அவர்களை கட்டுப்படுத்துதல். இந்தக் கட்டுப்பாடு என்பது ஊடகவியலாளராக இருக்கலாம் , பொதுமக்களாக இருக்கலாம் அல்லது அரசாங்க ஊழியர்களாக இருக்கலாம் ஆட்சியாளர்களின் நேர்மையற்ற உத்தரவுகளை மதிக்காத தலைவராகவும் இருக்கலாம். நமது பாதை இப்போது இருட்டில் பெரிய பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் நாட்டு மக்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.