உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்றைய தினம் மேலும் நால்வர் கைது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடத்திய பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹசீம் இன் தீவிரவாதக் கொள்கையை சமூக வலைத்தளத்தின் ஊடாக பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் ஆகும்.

இவர்கள் இருவரில் ஒருவர் வெல்லம்பிட்டியவில் வசிக்கும் 31 வயதான நபர் எனவும் மற்றவர் திஹாரியில் வசிக்கும் 32 வயதான நபர் ஆகும். சில வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் பணிபுரிந்த இவர்கள் வன் உம்மா (One Ummah) எனும் சமூக ஊடகம் ஒன்றை ஆரம்பித்து அதில் தவறான கொள்கைகள் மற்றும் பல்வேறு கடும்போக்குவாத மற்றும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கையில் இருந்து உரிய அதிகாரிகளால் கத்தார் அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ம் திகதி அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பின்னர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து ஒரு சில மணித்தியாலங்களுக்கு பின்னர் சஹ்ரான் ஹசீம் குழுவினருடன் சத்தியப்பிரமாணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தளத்தில் பதிவு செய்தது இவர்களில் ஒருவர் என்று தெரியவந்துள்ளதாகவும்.

அதேபோன்று மேலும் மூதூர் பிரதேசத்தில் வைத்து மேலும் இரு சந்தேக நபர்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 37 மற்றும் 38 வயதானவர்கள் ஆகும். கடந்து 2018ல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு கடும்போக்குவாத வகுப்புகளை நடத்த வசதிகளை வசதிகளை வழங்கியதற்காக குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு உள்ளதோடு அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள