பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கிறிஸ்தவர்களின் புனித தினமான உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இது உயிர்த்த ஞாயிறு தினம் முடியும் வரைக்கும் தொடரும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது முடியாத காரியமாக இருந்தாலும் நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவாலயங்கள் உள்ள பகுதிகள் உள்ளடக்கப்படும் விதமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் சுற்றுலா விடுதிகள் இராணுவ பாதுகாப்பு கோரப்பட்டிருந்த போதிலும் காவல்துறை இது சம்பந்தமாக நன்றாக செயல்படுவதனால் பாதுகாப்பு கவுன்சில் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து இது சம்பந்தமாக தன்மை அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் காவல்துறைக்கு மேலதிகமாக தேவை ஏற்பட்டால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி முப்படைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமைகளையும் கருத்தில்கொண்டு அரசாங்கத்தின் சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய தங்களது உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.