இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதி!

Getty Image

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுப்பிரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், மற்றும் யூசுஃப் பதான் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர் தான் மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார். இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை மாத்திரம் 81, 466 புதிய தெற்றாலாளர்களும் 469 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த வீதி பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்க Legend’s அணியின் இலங்கை வீரர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததுடன் சுய தனிமைப்படுத்தல் முடிவின் பின்னர் மேலும் ஒரு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள