இரசாயன தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவிடம் இருந்து ஊடக அறிக்கை.

விஷ ரசாயனம் அடங்க பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நுகர்வோர் அதிகார சபையால் நாடு முழுவதிலும் 25 மாவட்டங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரிகளை தெங்கு அபிவிருத்தி சபைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கிடைக்கப்பெற்ற 55 மாதிரிகளின் பெறுபேற்றின் அடிப்படையில் நுகர்வுக்கு அனுமதித்துள்ள அப்பிளேடாக்ஸின் அளவான 10 (ppb ) 10 Milligram per Kilo ஆக இருக்க வேண்டிய அப்பிளேடாக்ஸின் இரசாயனம் நுகர்வுக்கு அனுமதித்துள்ள அளவை விட கூடுதலாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் அவர் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில் ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எடுக்கப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் களஞ்சியசாலையில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இது மனித பாவனைக்காக சந்தைக்கு விடப்பட்ட தேங்காய் எண்ணெயில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேறுகள் ஆகும். இந்த தேங்காய் எண்ணெய் பொதுமக்கள் நுகர்வதை நாம் தடுக்கவில்லை என்றால் நமது நாட்டு மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்றார்.

இதேநேரம் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் எம். எல். டி நிரோஷன் தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக தேவையற்ற அச்சம் தேவையில்லை என்று தெரிவித்துள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் உள்ளது என்பதை தாங்களே முதலில் கண்டறிந்ததாகவும் எனினும் இரண்டாவது மாதிரிகளை சுகாதார அமைச்சு பரிசோதனைக்காக இன்னும் தங்களுக்கு வழங்கவில்லை என்றும் தர நிர்ணய நிர்வாகத்தின் பணிப்பாளர் சித்திக்கா சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Spread the love பகிர்ந்து கொள்ள