இன்று உயர் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்கள் வணக்கத்துக்குரிய ஸ்ரீவிமல தேரரை சந்திப்பதற்கு கெடன்பே விகாரைக்கு வருகை தந்திருந்தார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுப்படைந்த தேரர் ஆசி பெற வந்த கல்வி அமைச்சருக்கு மனது நிறைய போதனை!
நீங்கள் அதிகாரத்தை கேட்டீர்கள் நாங்கள் வழங்கினோம், நீங்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை என்று சொன்னதால் நாங்கள் அதையும் வழங்கினோம், 20 தேவை என்று சொன்னீர்கள் அதையும் வழங்கினோம், 19 தேவை என்றீர் அதையும் வழங்கினோம். இன்னும் என்ன வேண்டும் என்று கேட்கிறீர்கள்? கிடைக்கப்பெற்ற பெரும்பான்மை வைத்து வேலை செய்ய வேண்டும். அனைவரும் சிந்திப்பது தமது பைகளை நிரப்புவதற்கு.
ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னவர்கள் தற்பொழுது ஒரே நாடு பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தற்பொழுது சொல்லப்போனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பொதுமக்களுக்கு எதையுமே செய்ததாகத் தெரியவில்லை. நாங்களும் சேர்ந்து மக்களின் பேச்சுக்கு ஆளாகிறோம். காடழிப்பு செய்யப்படுகிறது என்று சொல்லும்போது காடுகள் அழிக்கப்படவில்லை என்று அரசாங்கம் சொல்லி மறுகணமே தொலைக்காட்சியில் காடழிப்பு செய்யப்படுகிறதை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பொய் சொல்ல வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அதிகாரத்தை கொடுத்தது சேவை செய்வதற்கு செய்வதற்கு என்று கூறிய தேரர் பின்னர் திரும்பவும் 32 பெரும்பான்மை ஒருபொழுதும் கிடைக்காது என்பது தமக்குத் தெரியும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
அதிகாரத்துக்கு வந்து ஓரிரு வருடங்களிலேயே பொதுமக்களிடத்தில் நம்பிக்கை இழந்து இருப்பதை இது காண்பிக்கிறது இதேபோன்றதொரு அறிக்கையை கம்பஹா நகரில் வைத்து ஒரு சந்திப்பில் பிரிதொரு அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியது குறிப்பிடத்தக்கது.