
ஜோர்தானிய அரசுக்கும் அரச குடும்பத்துக்கு எதிராக புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவின் சகோதரனான இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் கைது செய்யப்பட்ட தகவலை அந்நாட்டு ராணுவ தளபதி மறுப்புத் தெரிவித்த போதிலும் இளவரசர் ஆல் இரகசியமாக வெளியிடப்பட்ட காணொளி மூலம் தாம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தப்பட்டது. முன்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை மறுத்த இராணுவத்தளபதி பின்னர் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் அவர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.