பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நேற்று(04-04-21) ஜொஹானஸ்போக் (Johannesburg) கில் நடைபெற்றது நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களை பெற்று 342 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பாக அதிகூடிய ஓட்டமாக Bavuma 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் De cock 80, Van de Dussen 60, மற்றும் ஆட்டமிழக்காமல் Miler 50 ஆகியோர் அரைசதத்தை பெற்று தென்னாபிரிக்க அணியை ஒரு வலுவான நிலைக்கு இட்டுச் சென்றது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் Rauf 10 ஓவர்கள் பந்து வீசி 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் Shaheen,Hasnain மற்றும் Faheem ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
342 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 38 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 205 என்ற நிலையில் இருந்தது. இந்தநிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான Fakhar Zaman அதிரடியால் 155 பந்துகளை சந்தித்து 18 Fours மற்றும் 6 Sixes உள்ளடங்களாக பெற்றுக்கொண்ட 193 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீண்டது. Fakhar Zaman இன் அபார துடுப்பாட்டத்தால் தன் முகம் கொடுத்த கடைசி 50 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றதும் இதில் சுழற்பந்து வீச்சாளரான Tabraiz Shamzi யின் அடுத்தடுத்து 3 பந்துகளில் 6 ரன்கள் விளாசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்த பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் 342 என்ற இலக்கை தொட முடியாமல் 17 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட இத்தொடர் 1 – 1 என்ற சமநிலையில் உள்ளது.