நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களது ரீட் மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகுவதை தடுக்க இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் சார்பாக சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரனவினால் இந்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட ரிட் மனு இன்று (5) மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வந்தபோது மேன்முறையீட்டு நீதியரசர்களான அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கோரேயா ஆகியோரால் விசாரணைக் உட்படுத்தாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஞ்சன் ராமநாயக்க அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.