உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகத்துக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (05) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். நளின் பண்டார உடன் எதிர்க் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச , முஜிபுர்ரஹ்மான், ரஞ்சித் மத்துமபண்டார உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக உண்மையான குற்றவாளியை கண்டு பிடிப்பது இந்த அரசாங்கத்தின் பொறுப்பு. அதிகாரத்திலுள்ள அரசாங்கத்திற்கு மக்கள் பெரியதொரு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு. அரசாங்கத்தின் இயலாமையால் கிறிஸ்தவ சமுதாயம் தற்பொழுது அரசாங்கத்தின் பால் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்த அவர் தானும் அதே அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை குறித்த உண்மைகளை வெளியிட வேண்டும் எனவும் தான் இது சம்பந்தமாக மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்த அவர் இதே போன்று அமெரிக்காவில் 9 / 11 தாக்குதலுக்குப் பின் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பல பாடங்களைக் கற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள