முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்றும் அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் இன்று(05) பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி மேற்கொண்ட பதிலை வழங்கியிருந்தார்
ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ் அப்போதைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக 2013 -1 -15 ஆம் திகதி நாடாளுமன்றம் அப்போதைய ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 2013 1 15 ஆம் திகதி அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கம் அவரை நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை மூலம் தான் பதவி நீக்கம் செய்திருக்க முடியும். ஒரு ஜனாதிபதியால் அல்லது ஜனாதிபதி செயலாளரால் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்த அவர் இது சரி செய்யப்பட வேண்டும் என்றும் இது சம்பந்தமாக தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் தலைமை நீதியரசராக செயற்பட்ட சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்யப்பட்டு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மொஹான் பீரிஸ் இன் நியமனம் மற்றும் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து நீதியரசராக செயற்பட்ட மொஹான் பீரிஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் அப்பதவிக்கு சிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டதன் பின் தான் சுய விருப்பில் சிராணி பண்டாரநாயக்க ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த தலைமை நீதியரசர் பதவிக்கு கே ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டார்.