உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

இத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நவம்பர் மௌலவி என்றும் மற்றவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்பர் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் விசாரணைகள் நடைபெற்றதாகவும் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற 8 தாக்குதல் சம்பந்தமாக முக்கியமான சாட்சியங்களும் விசாரணைகளின் கோப்புகளும் இரண்டு மாதங்களுக்கு முன் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்ததாகவும் அதில் 32 பேருக்கு எதிராக கொலை மற்றும் சமாதானத்துக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்வதற்கான கால தாமதம் ஏனென்றால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இருந்ததாகவும் கூறினார்.

இப்போது அறிக்கை கிடைக்க பெற்றுள்ளதால் அவர்களுக்கு எதிரான வழக்குகளை வழக்கறிஞர் குழு மூலம் சாட்சியங்களில் ஏதாவது குளறுபடி உள்ளதா எனப் பார்த்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அதேவேளை மேலும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இன்று வரை பலவிதமான குற்றச்சாட்டின் கீழ் சுமார் 211 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருப்பதோடு அதில் 32 பேர் தாக்குதலுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நவம்பர் மௌலவி என்றும் மற்றவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்பர் மௌலவி என்றும் பெயர் குறிப்பிட்டார். நௌபேர் மௌலவி 2014 இலிருந்து ஈராக்கின் Al-Baghdadi உடன் தொடர்பில் இருந்ததாகவும் அதன் பின்னர் 2016 இல் ஸஹ்ரான் அவருடன் இணைந்ததாக தெரிவித்தார். இவர்கள்தான் பிரதான சூத்திரதாரி என்று கூறிய அவர் இதைத் தவிர பிரதான சூத்திரதாரி ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறினார். இருந்தாலும் மேலும் விசாரணைகள் நடைபெறுகிறது என்றும் அப்படி யாராவது இருந்தால் அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள