கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை ஒத்தி வைக்கும் வேலையில் பாராளுமன்ற உறுப்பினர் B.Y.G ரத்னசேகர அவர்களினால் கேள்வி-பதில் நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு பதிலளித்தார். வகுப்பறை 100 மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும். கதிரைகள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் இருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளுடன் தாம் இதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.