தென்னாபிரிக்காஅணிக்கு எதிரான தொடரை 2-1 பாகிஸ்தான் அணி கைப்பற்றியது (Video இணைப்பு)

South Africa Vs Pakistan அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட Ton Seal தொடரின் இறுதி ஆட்டம் இன்று(7) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்ஆப்பிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் இரண்டாவது போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் Fakhar Zaman இந்தப் போட்டியிலும் 101 ஓட்டங்களை 104 பந்துகளை சந்தித்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர Imam (57) மற்றும் Baber (94) ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.

தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் Maharej 10 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அதேவேளை Markram 10 ஓவர்கள் பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

நிர்ணயிக்கப்பட்ட 321 ஓட்டங்களுக்கு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியால் 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதில் J Malan, Verreynne மற்றும் Phehlukwaya ஆகியோர் அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்க அணியை ஓரளவுதாக்கு பிடிக்க உதவியது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக J Malan(70) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியை சுற்றுலா பாகிஸ்தான் அணி 28 ஓட்டங்களால் வெற்றி வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியது.

https://youtu.be/8mXga66jwA8

Spread the love பகிர்ந்து கொள்ள