ஒலுவில் பிரதேசத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெளிநாட்டுத் தீவிரவாத குழுக்கள் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் தகவல்கள் அடங்கிய CDக்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு போதனைகள் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது.
30 மற்றும் 39 வயதுடைய இருவரும் 2018 ஆம் ஆண்டு தமது வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவர்களது அனுமதியின்றி பல்வேறு உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதை விரும்பாத மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் நடைபெறுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் உடன் நெருங்கிய தொடர்புடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.