இலங்கைக்குள் புதிய கோவிட் – 19 திரிபோன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திமா ஜீவன்தர தெரிவித்தார்.
கடந்த மாதம் கோவிட் – 19 தொற்றாலர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 35 மாதிரிகளில் மேற்படி புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திமா ஜீவன்தர தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பத்தரமுல்ல மற்றும் சபுகஸ்கந்த போன்ற பிரதேசங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாலர்கள் அனைவரும் B.1.411 கோவிட் – 19 என்ற புதிய திரிபுக்கு உட்பட்டவர்கள் ஆகும். எனினும் தற்போதைக்கு இதன் தன்மைகளை கூறமுடியாது எனவும் இது சம்பந்தமாக பரிசோதனைகள் ஆரம்பித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர் கோவிட் – 19 பரவலாகும் போது இந்த திரிபு வீதம் உருவாகும் என்பதனால் இதன் தொற்று விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். தற்போதைக்கு மன்னார், கேகாலை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் அதிக புதிய திரிபு தொற்றாலர்கள் பிரதேசங்களாக தகவல்கள் வெளியாகியுள்ளது.