கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தலின் பிரகாரம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அஜித் மன்னப்பெருமவுக்கு 5 ஆவது இடம் கிடைக்கப்பெற்றது அத்தேர்தலில் அவர் பெற்றுக் கொண்ட மொத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 47212 ஆகும்.
அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் அவர் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதன்படி அஜித் மன்னப்பெரும இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டங்கள் எதுவும் எந்த பலனையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.