தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது பற்றி முன்வைத்த துணிச்சலான கருத்துக்களால் எரிச்சலடைந்த பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சேகான் சேமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு தெரிவித்த கருத்து தொடர்பாக குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சேகான் சேமசிங்க அவர்களின் இந்த கருத்து தொடர்பாக இன்று(09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எவ்வித அச்சமுமின்றி பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி தனது கருத்தை தெரிவிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதை யாராலும் மீற முடியாது என்றும் சேகான் சேமசிங்க தனது பெயரை குறிப்பிட்டு இது சம்பந்தமாக குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தம்மை விசாரிக்க வேண்டும் என்பது தனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.