South Africa Vs Tourist Pakistan அணிக்கும் இடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி(Video இணைப்பு).

South Africa Vs Tourist Pakistan அணிக்கும் இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட T20 போட்டியின் முதலாவது போட்டி இன்று Johannesburg இல் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி தாம் முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தது. அதன்படி 20 ஓவர்களை எதிர்கொண்டு தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பாக Markram 51 ஓட்டங்களையும் Klaasen 50 ஓட்டங்களையும் Van Biljon 34 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக Mohamed Nawas 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் Hassan Ali 4 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய அதேவேளை Shaheen Afridi மற்றும் Haris Rauf தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 189 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்புக்கு 19.5 ஓவர் முடிவில் பெற்று வெற்றியீட்டியது. இதில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளரும்மான Mohamed Rizwan அபாரமாக அதிரடி ஆட்டம் ஆடி 4*9 ரன்கள் மற்றும் 2*6 ரன்கள் உட்பட 74 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பாக B Hendricks 4 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் Shamis 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியது.

இதன் மூலம் 1-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி தொடரில் முன்னிலையில் உள்ள அதேவேளை இரண்டாவது T20 போட்டி எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

https://youtu.be/eIJFsmqD7Oc
Spread the love பகிர்ந்து கொள்ள