கைது செய்யப்பட்ட யாழ் மாநகர சபை தலைவர் சட்டத்தரணி விஷ்வலிங்கம் மணிவண்ணன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யாழ் மாநகர மேயரின் கைது தொடர்பாக அமெரிக்க தூதுவர் தனது கவலையை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது அதில் யாழ் மாநகர மேயரின் கைது கவலைக்குரியது என்றும் அனைவரினதும் அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரத்தில் இறுக்கமான சட்ட விதிமுறைகள்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறந்த வழியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் மாநகர சபை தலைவர் சட்டத்தரணி விஷ்வலிங்கம் மணிவண்ணன் பின்னர் பயங்கரவாத விசாரணை பிரிவால் 10 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார். விசாரணைகளின் பின்னர் இன்று சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட பின் கருத்து தெரிவித்த அவர் தன்னை கைது செய்யப்பட்டமை யாழ் மாவட்ட அரச செயற்பாடுகளுக்கு பொலிஸார் மேற்கொண்ட மாபெரும் அச்சுறுத்தல் எனவும் தமது மாநகர செயற்பாடும் சட்ட வரம்பை மீறி செயற்பட்டால் அது இந்நாட்டில் எப்படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று தாம் கேட்டதனால் போலீசார் சாதாரண தண்டனை சட்டக் கோவையில் இவ்வழக்கை தொடர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் கைது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள