அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலிசாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதையடுத்து மினியாப்பொலிஸ் நகரம் கலவர பூமியானது. மினியாப்பொலிஸ் நகரில் இதற்கு முன்னர் George Floyd படுகொலை மீதான வழக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது நடைபெற்றுள்ள இந்த சம்பவமானது 20 வயதுள்ள Daunte Wrighte என்ற சந்தேக நபருக்கு போலீசாரால் கைவிலங்கிட முயற்சிக்கும் போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி தனது காரில் இருக்கைக்கு சென்ற வேலை தவறுதலாக தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டப்பட்டுள்ளது. பின்னர் படுகாயங்களுக்கு உள்ளான Daunte Wrighte தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு வாகனம் சில தடுப்பு அரண்களை உடைத்துக் கொண்டு சென்றுள்ளது.
மேற்படி சம்பவத்தால் கொதித்தெழுந்த பொதுமக்கள் மினியாப்பொலிஸ் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலை இரண்டு போலீசாரின் வாகனங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆல் சேதமாக்கப்பட்டுள்ளது தற்சமயம் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய போலீசாரின் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக Tim Gannon அந்த இடத்துக்கு பொறுப்பான பிரதான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
Thanks Fox 9.