Iranin Natanz எனும் ஈரானின் பிரதான அணு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை Cyber Attack நடத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைமை அனுசக்தி அதிகாரி Ali Akbal Salehi தெரிவித்துள்ளது.
புதிய கருவிகளுடன் சமீபத்தில் தொடங்கிய மேற்படி அணு ஆலையின் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என தெரிவிக்கும் அதேவேளை நடத்தியது யார் என்பதை தெரிவிக்கவில்லை. மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த தாக்குதலில் ஈரானின் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஒரு நாடுதான் இந்த தாக்குதலை செய்திருக்க முடியும் என்றும் இது அணு தீவிரவாதம் என்றும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய அரச வானொலி சேவை ஒன்று ஈரானிய அணு ஆலை ஒன்றின் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் பிரதான அதிகாரி கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அவர் கடந்த ஆண்டு நமது பாதுகாப்பு படைகள் எமது எதிரி மீது பல தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அதேபோன்று தாக்குதல்கள் இந்த ஆண்டும் தொடரும் எனவும் இன்றும் அதுபோன்ற வெற்றிகரமான தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் அணுத் செறிவூட்டல் தொடர்பாக இஸ்ரேல் பல எச்சரிக்கைகளை ஈரானுக்கு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் பிரதான அணு ஆலையான Natanz மீது இதற்கு முன்னரும் அதாவது 2010ம் ஆண்டு இதுபோன்றதொரு தாக்குதலை அப்போது நடத்தியிருந்தது. கணனி வைரஸ் ஒன்று உருவாக்கப்பட்டு அது ஈரானின் அணு ஆலையில் இயங்கும் பிரதான கணனியை கைப்பற்றி கணினி மூலம் இயங்கும் யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கு சுழற்சிக் கருவியின் வேகத்தை அதிகரித்து அதன் மூலம் அக்கருவி அதி வேகமாக சுழன்று செயலிழக்க வைக்கப்பட்டது.