முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக 75 மெட்ரிக் டன் பேரீத்தம் பழம் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடை.

இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழம் இந்த ஆண்டு 2021-03-16 இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

75 மெட்ரிக் டன் பேரீத்தம் பழத்தை சவுதி அரேபிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் கௌரவ Rifai Al Sharif அவர்களினால் பிரதமரும் புத்தசாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இப் பேரீத்தம் பழங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A. B.M அஷ்ரப் அவர்களிடம் கையளிக்கப்பட்ட பின் விரைவில் நாடு பூராகவும் பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்து அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது .

Spread the love பகிர்ந்து கொள்ள