சீனாவின் பாரியமுதலீட்டுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் சம்பந்தமாக புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல இயக்கங்கள் சர்ச்சைக்குரிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற அதேநேரம் இச் சட்ட மூலத்திற்கு எதிராக சுமார் 20க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று(17) ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சர்ச்சைக்குரிய சட்ட வரைவு சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப சரியான முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகும் என்றும் துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் தேவை என்றால் அதன் பிரகாரம் அதை நாம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம் என்றார்
மேலும் இந்த சட்ட மூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தாள் இந்த சட்டமூலத்தின் மாற்றங்களை செய்வதற்கும் அரசாங்கம் தயார் எனவும் இன்று(17) ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் நடைமுறையில் உள்ள 14 சட்ட வரைவில் எந்த சட்டவரைவுகளுக்கும் துறைமுக நகரம் உள்வாங்கப்படவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.