சமூர்தி குறை வருமானம் பெறுவோர், மூத்த பிரஜை மற்றும் நீண்ட கால நோய்வாய்ப்பட்டோருக்கான 5000 ரூபா கொடுப்பனவு கடந்த 12ஆம் தேதி ஆரம்பமாகி இதுவரை 23 லட்சம் குடும்பங்களுக்கு இது பகிரப்பட்டுள்ளது எனவும் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 11 ஆயிரத்து 500 மில்லியன் ஆகும் என அமைச்சர் சேகான் சேமசிங்க தெரிவித்தார்.
நேற்றும் இக் கொடுப்பனவு கொழும்பை அண்டிய பகுதிகளில் வழங்கப்பட்டதாகவும் அதேவேளை மேலும் பல பிரதேசங்களில் இதற்கு தகுதியுடையோர் இருப்பதாகவும் அவர்களுக்கான கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை(19) சம்பந்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்ககளிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தின் வீழ்ச்சியை மறைப்பதற்காக பல உத்திகளைக் கையாண்டு கைகூடாத நிலையில் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.