வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை கட்டுப்படுத்த அல்லது சுய தனிமைப்படுத்தலை மேலும் கடினமாக நடவடிக்கை!

நாட்டில் நேற்று மாத்திரம் 237 கொரோனா புதிய நோய் தொற்றாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 78 தொற்றாலர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.

April மாதம் ஆரம்பத்தில் இருந்து இன்று (17) வரைக்கும் நாட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றாலர்களின் எண்ணிக்கை 3,450 பேர் எனவும் அதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார். அதன்படி 15%க்கும் அதிகமானோர் வெளிநாட்டிலிருந்து வருகைதந்து சுய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்ட பின் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர் இதனால் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரை முகாமைத்துவம் செய்யும் நோக்குடன் திரும்பவும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை அல்லது அவர்களை சுய தனிமைப்படுத்தலை மேலும் கடினமாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாலர்களின் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த தொற்றாலர்களின் எண்ணிக்கை 23 ஆகும்.

Spread the love பகிர்ந்து கொள்ள