உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதம் அல்ல – பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை.

Getty Image

கொழும்பு மாவட்ட பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி பொரளை மயானத்தில் நடைபெற்ற ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்தார்.

அன்று நமது சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியது மத தீவிரவாதம் அல்ல எனவும் அந்த மதத் தீவிரவாதத்தை பயன்படுத்தி பல குழுக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக நடைபெற்ற தாக்குதல் ஆகும் என்றார்.

மேலும் நமது நாட்டில் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தயவுசெய்து மதங்களையும் மொழியையோ அல்லது இனத்தையோ பயன்படுத்தி இன்னொருவரை சிரமத்திற்கு உள்ளாக்காதீர் அதேபோன்று அதிகாரத்திற்காக மனிதர்களை பலியிடும் மனநிலையிலிருந்தும் மீளுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Spread the love பகிர்ந்து கொள்ள