நாடு பூராகவும் போதை பொருள் தேடுதல் வேட்டை 120 KG போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பல போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது சுமார் 120 KG அதிகமான ICE வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் ஹெரோயின் போதைப் பொருள் 101 கிராம் மற்றும் ICE வகை போதைப் பொருள் 113 கிராமுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் மறுநாள் ஜா-எல பகுதியில் வைத்து ICE வகை போதைப் பொருள் 15 KG கைப்பற்றப்பட்டதாகவும் இது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பின்னர் நடைபெற்ற விசாரணைகளின் சப்புகஸ்கந்த பகுதியில் மேலும் ICE வகை போதைப் பொருள் 110 KG கைப்பற்றப்பட்டு சந்தேகத்தின் பேரில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் போதைப் பொருள் தேடுதல் சம்பந்தமாக மேலும் சுற்றிவளைப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள