மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை 10 பிரதான கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமொன்று இன்று(19) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

மாகாணசபை தேர்தல் சம்பந்தமாக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே மேற்படி கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, அத்துரலியே ரத்தன தேரர், அதாவுல்லா உட்பட 10 பிரதான கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்குபெற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில் நேற்று மாலை நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு பதிலாக 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் இக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் இதில் அதிகமானோர் பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இக்கூட்டத்தில் வீண் விவாதம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற முடிவை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்ததாகவும் அதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அவர்களுக்கு தெரியப்படுத்தி கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரிதொரு நாளை ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டதை அடுத்து அவர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள