விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்.

விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறி உள்ளதால் கண்டிப்பாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானது பொது ஜன பெரமுன கட்சியின் வாக்குகளால் அன்றியே அவரின் தனிப்பட்ட வாக்குகள் அல்ல எனவும் இது சம்பந்தமாக கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று(19) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஆசீர்வாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஒழுக்காற்று நடவடிக்கை என்பது அக்கட்சியின் உரிமை எனவும் நாட்டில் சட்டம் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள