மத அடிப்படைவாதம் பற்றி பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று கூறிய கருத்து தவறான புரிதல்!

நேற்று(18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி பொரளை மயானத்தில் நடைபெற்ற ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு கொழும்பு மாவட்ட பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி தாக்குதல் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருந்தார்.

பின்னர் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தான் நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிர்மறையான கருத்தை இன்று தெரிவித்திருந்தார்.

தான் நேற்று தெரிவித்ததை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். தான் இந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இல்லை என்று கூறவில்லை என்றும் தான் சர்வதேச வஹாப் வாதம் தொடர்பாக தான் தனது கருத்து எனவும் தெரிவித்த அவர் இந்நாட்டில் குறிப்பிட்ட கட்சியையோ அல்லது குறிப்பிட்ட தலைவர்களையோ தொடர்புபடுத்த வில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நாம் அனைத்து முஸ்லிம்களையும் குறை கூற முடியாது ஒரு சிறிய குழு இதற்கு காரணமாக இருக்கலாம். இந்நாட்டின் முஸ்லிம்கள் காலம் காலமாக சிங்கள மக்களோடு மிகவும் நல்ல முறையில் ஒற்றுமையுடன் வாழ்ந்துள்ளனர் அவர்களுக்கு நான் இந்த தாக்குதல் அடையாளத்தை பதிக்க விரும்பவில்லை என்றார். சர்வதேச சக்திகளின் தாக்கத்தினால் இவர்களிடத்தில் சிலர் வழிதவறி தூய்மையான இஸ்லாத்திற்கு அப்பால் சென்று அடிப்படைவாதம் மற்றும் வஹாப் வாதத்தின் பக்கம் சென்றுள்ளனர்.

எனவே இந்நிலையில் அவர்களை சரியாக கையாள வேண்டும் எனவும் காலம் காலமாக இந்நாட்டில் பாதுகாத்து வந்த தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதிப்பளித்து அடிப்படைவாத சிந்தனைகளுக்கு உங்கள் பிள்ளைகளை செல்லாமல் பாதுகாக்குமாறு தான் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

Spread the love பகிர்ந்து கொள்ள