அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக தலிபான்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய காலம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் Joe Biden வெள்ளை மாளிகையில் வைத்து தெரிவித்தார். 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலை ஆரம்பிக்க கட்டளையிட்ட அதே அறையில் வைத்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளது விஷேட அம்சமாகும்.
இரட்டை கோபுர தாக்குதலில் 20 வருட நிறைவையொட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்கா தனது இராணுவத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேற தயாராகின்றன அதேவேளை தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தொடரும் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.