சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு!

Getty Image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி குழு கூட்டத்தில் மேற்படி விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இதனை நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே சி அல வத்துவல உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ரஞ்சன் ராமநாயக்க அவரின் விடுதலை சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுமாறு சஜித் பிரேமதாச அவர்களுக்கு தெரிவித்ததாகவும் அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் என்ற வகையில் அவரின் கடமை ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கையை நிறைவேற்ற அதற்குத் தேவையான நடவடிக்கைகளை செய்வது என்று தெரிவித்தார்.

இதேவேளை பொது மன்னிப்புக் கோரிக்கையை தமக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி தரப்பில் தெரிவித்திருக்கும் அதேவேளை கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் சுகம் விசாரிப்பதற்கு சிறைச்சாலைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள