பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை(video).

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினமான இன்று(21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அனைத்து கோப்புகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி இருப்பதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற வகையில் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பாராளுமன்றில் உயிர் நீத்தவர்களுக்காக மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய அதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையில் கருப்பு நிற துண்டையும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடைகளும் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள