உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள், சூத்திரதாரிகள் சுதந்திரம்! நீதியை நிலைநாட்டு என்ற தொனிப்பொருளில் இன்று(21) மக்கள் விடுதலை முன்னணி ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.
அதில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தலையில் வைத்து வணங்கி வந்தவர்கள் தற்பொழுது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற கேள்வியை கேட்கும் போது சங்கத்திற்கு வலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாம் கொழும்பு மற்றும் பிற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள், சூத்திரதாரிகள் சுதந்திரம்! நீதியை நிலைநாட்டு என்ற விளம்பரங்களை சிவில் உடை தரித்த போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி இரவோடிரவாக அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தது என்று தெரிவித்தார்.