மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மேல் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ம் தேதி வரை விடுமுறை.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி தீர்மானத்தை கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார். ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமாயின் கல்வி அமைச்சால் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் 3 கல்வி வலயத்திற்கு உட்பட்ட 15 பாடசாலைகள் இந்த மாதம் 30ஆம் தேதி வரை மூடப்படும் என்று மொனராகல மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Spread the love பகிர்ந்து கொள்ள