ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தேவையான விண்ணப்பப்படிவத்தை காவல்துறையால் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள