நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை.

நேற்றுவரை மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு மாத்திரம் விடப்பட்டிருந்த விடுமுறை இன்று முதல் நாட்டிலுள்ள சகல பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை விடப்படும் என கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்படி அறிவித்தலை தெரிவித்திருந்த அதை வேலை எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிப்பதை இந்தவார இறுதி நாட்களில் வலயக்கல்விப் பணிப்பாளர், சுகாதாரப் பிரிவு மற்றும் அதிபர்களுடன் கலந்தாலோசிக்கபட்டதன் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள