மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் இன்றும் சுய தனிமைப்படுத்தலில்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள உக்குவெலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேகும்புற கிராம சேவகர் பிரிவும் பொலன்நறுவை மாவட்டத்தில் உள்ள ஹிங்குரங்கொட போலீஸ் பிரிவில் பிரிவிற்குட்பட்ட சிறிகொத்த கிராம சேவகர் பிரிவும் சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவ்வெண்ணதென்ன கிழக்கு கிராம சேவகர் பிரிவு கொடதெநீயாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொள்ஹோன, ஹிரலுகொதர, களுஅக்கல, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மற்றும் குளியாப்பிட்டிய போலீஸ் பிரிவு ஆகிய ஆறு இடங்களும் ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இடங்களாகும்.

Spread the love பகிர்ந்து கொள்ள