சமூகவலைத் தளங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா அவர்கள் #Rejecthate எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளது.
மேலும் அவர் தனது உரையில் சமூக ஊடகங்களுக்கு ஒரு பெரிய சக்தி இருக்கிறது அது மனிதர்களை எல்லைகளைத்தாண்டி ஒன்றிணைக்கிறது. இவைவிழிப்புணர்வையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கக்கூடியதாக உள்ளது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மதவெறி மற்றும் வெறுப்புப்பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உறுதிபூண்டுள்ளதுடன் அதற்கு எதிராக சட்டங்களும் இயற்றியுள்ளதைக் கண்டுநாம்மகிழ்ச்சி அடைகிறோம்.
குறிப்பாக ஹோலோகாஸ்ட் போன்றபதிவுகளை தடைசெய்தவை நல்ல ஆரம்பமாகும். ஆனால் தற்போது சமூக ஊடக நிறுவனங்களுக்கு இதைவிட அதிகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ள கட்டாயத்தில் உள்ளது.
இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என்பது ஒரு நோய்.. அதனைகுணப்படுத்தும் இடமாக சமூகஊடகங்கள் இருப்பதில்லை. சமூக ஊடகங்களுக்கு இதை சிறப்பாக செய்யமுடியும். இதனால் உலகமுஸ்லிம் அமைப்பு வெறுப்புப் பேச்சுக்களை தடை செய்வதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
முஸ்லிம்களை குறிவைத்து பகிரப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான பிரசாரத்துக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம். இதை நாம் ஒருநாளும் சகித்துக்கொள்ளமாட்டோம்! முஸ்லிம்களை மட்டுமல்லாது எந்த ஒரு மதத்தையும் குறிவைத்து நடத்தப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை நிராகரிப்பதற்கான இந்தப்பிரச்சாரத்தில் உங்களையும் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
நீங்களும் இணைந்துகொள்ள இணைப்பில் கிளிக்செய்து மனுவில் கையொப்பம் இடவும்.
அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள உலகத்தை உருவாக்க எங்களுக்கு உதவுங்கள்!. உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா.