இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணையை மீல் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு..

புற்றுநோய் ஏற்படுத்தவல்ல இரசாயன பதார்த்தம் அடக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை உடனடியாக மீல் ஏற்றுமதி செய்யுமாறு தான் உத்தரவிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று 29-03-2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சுகாதார அமைப்பின் உணவுக்கட்டுப்பாட்டு பிரிவால்தான் மேற் கூறப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தவல்ல இரசாயன பதார்த்தம் இருப்பது முதன் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரிதொரு அறிவிப்பை தர நிர்ணய சபையால் மார்ச் மாதம் 04 தேதி சுங்கப் பிரிவு பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தர நிர்ணய சபை மீல் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தர நிர்ணய சபை அல்லது சுங்கப் பிரிவு பாவனைக்கு உதவாத இந்த எண்ணெயை ஒரு போதும் சந்தைக்கு விட அனுமதி அளித்ததில்லை. மீள்பரிசீலனை கோரிக்கை காரணமாக இவ்வெண்ணெய் சுங்கப்பிரிவினரிடம் இருந்து அவர்களது களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்த அனுமதித்ததாகவும் இது சந்தைப்படுத்தல் அனுமதி கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதே நேரம் நுகர்வோர் அதிகார சபையால் பல நகரங்களில் சந்தையில் தற்போது பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது எனவும் இப்படி சோதனை செய்து பார்ப்பதன் மூலம் இவை சந்தை படுத்தப்பட்டு உள்ளதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியும் என்றார். அதனால் நான் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன் இது சம்பந்தமாக நீங்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

பொதுமக்களின் சாதாரண கேள்வி என்னவென்றால் சந்தைப்படுத்த வில்லையெனில் ஏன் மாதிரிகளை சேகரிக்க வேண்டும்??

Spread the love பகிர்ந்து கொள்ள