புத்தாண்டு பிறப்பின் போது தலைவர்கள் புத்தாண்டு கொண்டாடி உண்ணும்போது சாதாரண பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் பார்த்து விரலை சுவைக்க வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் நான் இந்த அரசாங்கத்துக்கு கட்டாயப்படுத்தி ஒன்றை கூற விரும்புகிறேன். குறைந்தது இந்த சிங்கள தமிழ் புத்தாண்டு பருவத்தில் பொதுமக்களை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் வாழ்க்கை செலவை குறைக்க பொதுமக்களுக்கு ஒரு சலுகையை வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். அன்று நாம் ஒரு அரசாங்கம் என்ற வகையில் 100 நாள் வேலை திட்டத்திலும் கூட பொது மக்களது அன்றாட வாழ்வாதாரம் மேம்படும் விதமாக சலுகைகளை வழங்கி இருந்தும். அதேபோல பல தீர்மானங்களையும் எடுத்து இருந்தோம் என்பதை இச் சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்துக்கு நான் மீண்டும் நினைவூட்டுகின்றேன்.
குறிப்பாக அப்போதைய அரசாங்கம் என்ற வகையில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிகளை குறைத்து அதன் சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கினோம். குறிப்பாக பெட்ரோலை மாத்திரம் 33 ரூபாவால் குறைத்து இருந்தும். அதேபோல் மருந்து பொருட்களின் விலையை குறைத்தல், சமூர்தி பயனாளர்களுக்கு கிடைக்கும் கொடுப்பனவு மற்றும் பயனாளர்களின் அளவை நமது அரசாங்கத்தால் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டன இதே போல் இன்னும் பல சலுகைகளை மக்களுக்கு நமது அரசாங்கத்தால் வழங்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் கொடுப்பனவு, மூத்த குடிமக்களுக்கான கொடுப்பனவு மற்றும் அரசு சேவையாளர்களின் சம்பளத்தை சரித்திரத்தில் முதன் முதலாக 10,000 ரூபாவாக அதிகரிப்பு போன்றவையாகும். குறைந்தபட்சம் சிங்கள தமிழ் புத்தாண்டை மக்கள் சந்தோஷமாக கொண்டாட பல சலுகைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படியில்லையென்றால் புத்தாண்டு பிறப்பின் போது தலைவர்கள் புத்தாண்டு உண்ணும்போது சாதாரண பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் பார்த்து விரலை சுவைக்க வேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்தார்.