பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு, உணவுக்கு ஏற்ற பெருமதி அதே போன்று அதன் தரம் என்பதை கையாளுவது ஒரு நாட்டில் அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்பொழுது புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்காக அனுமதி அளித்த பொறுப்பாளர்கள் யாரும் இல்லை. அரசாங்கம் இதற்கு ஒரு விசாரணை நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணி ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது இதற்கு முன்பும் அரசாங்கம் இதுபோன்று வியாபாரங்களை அவர்களது உற்ற நண்பர்கள் கூட்டாக சேர்ந்து விசேஷமா சுங்கத் திணைக்களத்திடம் இருந்து அவற்றை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. ஒரு வழியில் தேங்காய் எண்ணெய் மூலம் வரி மோசடி பிறிதொரு வழி மூலம் நச்சுத்தன்மையான தேங்காய் எண்ணெய் இறக்குமதி. இப்படி இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மையுள்ள எண்ணையை தனியார் நிறுவனங்களின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்த அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத்திடம் கேட்கிறோம் அனுமதி அளித்தது ஏன்?. இது சரியா?. தனியார் களஞ்சியசாலை களுக்கு அவை போனதன் பின்பு அவை களஞ்சியசாலையில் இருந்து வெளியே செல்லாது என்பதற்கான எந்த ஒரு உறுதியும் சுங்க அதிகாரிகளுக்கு இல்லை. களஞ்சியசாலையில் இருந்து வெளியே செல்லும் அளவுக்கு அளவுக்கு ஏற்ப திரும்பவும் எண்ணையை மீள் நிரப்பவும் முடியும். அரசாங்கம் தற்பொழுதுதான் களஞ்சியசாலையில் இருந்து விநியோகிக்கப்பட்ட எண்ணெயின் அளவை கணக்கிடுவதற்கான விசாரணையை தொடங்கியுள்ளது அதுமட்டுமல்லாது களஞ்சியசாலைகலை முடக்கவும் தொடங்கியுள்ளது.
தற்பொழுது களஞ்சியசாலை முடக்குவதனால் எந்த பயனும் இல்லை என்றும் இதிலுள்ள பாரதூரமான விளைவு என்னவெனில் விநியோகிக்கப்பட்ட எண்ணையின் அளவுக்கேற்ப களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கு மீளவும் நிறப்பி இருக்க முடியும் என்றும் அது முடியாமலும் இல்லை எனவும் தற்பொழுது பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது பிறக்கவிருக்கும் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுது நாம் சாப்பிடுவது எந்த எண்ணெய் என்பதாகும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.