போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்கு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! – பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன.

இன்று ஊடகவியலாளரான ரங்கன சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன விடம் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்

ஒரு சில போலீஸ் அதிகாரிகள் தங்களது போலீஸ் சீருடையை துஷ்பிரயோகம் செய்வதை நாம் யாவரும் அறிவோம் அதேநேரம் பல போலீஸ் அதிகாரிகள் தங்களது கடமையை தெய்வமாய் மதித்து நடக்கின்றன அவர்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் பாராட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தனது கேள்விகளை தொடுத்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதிலளிக்கையில் சாதாரணமாக கிராமத்தில் இந்த மாதிரியான விபத்துக்கள் நடந்தால் கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாரதியை தாக்கி வாகனமும் தீக்கிரை ஆக்கப்படும். இது ஒரு சாதாரண பொது மக்கள் என்ற வகையில் அவர்களது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இதை செய்யலாம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி என்ற வகையில் அந்த நடவடிக்கையை நாம் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். ஏனென்றால் அவருக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம் கோபத்தை கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதற்கு. சந்தேகநபர் கைது செய்வதை எதிர்த்தால் அல்லது தப்பிக்க முயற்சித்தாள் குறைந்த அளவு சக்தியை பயன்படுத்தி சந்தேகநபரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இருந்தாலும் ஏறி குதித்தல் போன்ற நடைமுறை போலீஸ் சேவையில் இல்லை.

போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்:

ஆம் கட்டாயமாக உண்மையில் இது சம்பந்தமாக நமது நாட்டில் குற்றவியல் சட்டத்தில் 93 ஆம் 94 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தம்மை கைது செய்யும்போது எவ்விதமான எதிர்ப்பையும் காட்டாமல் இருந்தும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுமாயின் மேற்படி சட்ட நடைமுறையை பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளலாம் சட்டம் என்பது அனைவருக்கும் சமன் என்ற வகையில் தனிநபர் பாதுகாப்பு என்பது பாதிக்கப்பட்ட நபருக்கும் உண்டு என்று பதிலளித்தார்.

நன்றி சுவர்ணவாஹினி.

Spread the love பகிர்ந்து கொள்ள